தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

மதுரை ஆதினம் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு

              பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்த மதுரை ஆதினம் அருணகிரி நாதரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அருணகிரி நாதரின் கருத்து ஏற்புடையது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இது காலம் கடந்த தவறான கருத்து எனவும் தா. பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை ஆதினத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு அவர்களே காரணம் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருப்பதாக கூறினார். ஆதினத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் குறை கூறியுள்ளார்.
மதுரை ஆதினம் சர்ச்சைக்குரியவர் என்பதால், அவர் கூறும் கருத்துக்களும் அவ்வாறே இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என்றும் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
-தேனி முருகேஸ்ன்