மதுரையில் 7 விவசாய மருந்துக்கடைகளிலிருந்து 47 லட்ச ரூபாய் மதிப்பிலான போலி மற்றும் காலாவதி ஆன பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடைகளிலிருந்து வாங்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்தும் பூச்சிகள் கட்டுக்குள் வரவில்லை என விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரையில் உள்ள சிம்மக்கல், கீழமாட வீதி உட்பட பல இடங்களில் வேளாண் துறை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் வேளான்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
அப்போது சிம்மக்கல்லில் உள்ள ஒரு கடையில் கடை உரிமையாளர் உரிமம் இல்லாமல் போலியான மருந்துகளையும், அதற்கான ஸ்டிக்கரையும் தயாரித்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து திலகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஜெய்சிங் , போலி மருந்துகள் தயாரிப்பதைக் குடிசைத் தொழில் போல் பலர் செய்து வருவதால் இது குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
-பசுமை நாயகன்