தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

Pasumai Nayagan www.thagavalthalam.com
இது தேவையா...: 
வரும் வாகன ஓட்டிகள், முன்னால் செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல், ரோட்டை மறைத்து, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல், இப்படி ஆட்டோவை "தள்ளி' டூவீலரில் செல்லும் ஆபத்தான பயணம் தேவையா? இடம்: மதுரை பைபாஸ் ரோடு

முதன் முறையாக மதுரையில் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பதிவு

    
Pasumai Nayagan www.thagavalthalam.com
          நாட்டிலேயே முதன் முறையாக, மதுரை தலைமை தபால் நிலையங்களில், ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் விண்ணப்பப் பதிவு சேவை துவக்கப்பட்டது. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், வடக்கு வெளி வீதி தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில், தென் மண்டலத் தலைவர் சாருகேசி கூறுகையில்,"" இச்சேவை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைந்து செயல்படுகிறது. அரசரடி, தல்லாகுளம், வடக்கு வெளி வீதி தலைமை தபால் நிலையங்களில், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை, 50 ரூபாய் கட்டணத்தில், இச்சேவை கிடைக்கும், '' என்றார். 

பாஸ்போர்ட் மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா பேசியதாவது: மூத்த குடிமக்கள், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் இங்கு விண்ணப்பித்தால், முன்அனுமதி தேவையில்லை. பதிவு எண் (ஏ.ஆர்.என்.,) பெற்று, பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகலாம். படிக்காதவர்கள் விண்ணப்பிக்க, தனியார் கம்ப்யூட்டர் மையங்களை நம்பி உள்ளனர். இதற்கு, 100 முதல் 1,000 ரூபாய் வரை, வாங்குவதாக புகார்கள் வருகின்றன.
தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் கட்டணத்தில் இச்சேவை பெறலாம். தென்மண்டல தபால் அலுவலகத்தின் சேவையும், எங்கள் மண்டல சேவையும், ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியதால், விரைவில் அந்த மாவட்ட தபால் நிலையங்களுடன் இணைந்து செயல்படுவோம். 
பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில், கடந்த ஆண்டு, 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், வேலை தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர், குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டத்தினர் அதிகம். கடந்த 1989 க்குப்பின் பிறந்தவர்களுக்கு, வயதுச் சான்றிதழ் தனியாக தேவை என்பதால், போலிச் சான்றிதழை கொடுக்கின்றனர். கடந்த ஆண்டு, 150 சான்றிதழ்கள் "போலி' என, கண்டறியப்பட்டது. தொடர்ந்து, பத்திரிகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம், தற்போது அவை குறைந்துள்ளன. சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டால், ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் துறைகளின் இணையதளங்களைப் பார்த்து ஆய்வு செய்கிறோம்
இவ்வாறு கூறினார்.


போலீஸ்காரர்களே ஜாக்கிரதை..... ! எப்.ஐ.ஆர், பதிவு செய்ய மறுக்காதீங்க .!


www.thagavalthalam.com பசுமை நாயகன்


         நாடு முழுவதும் போலீசாருக்கு தலையில் குட்டு வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட் எப்.ஐ.ஆர், தொடர்பா ஒரு சிறப்பு யோசனையை வழங்கியிருக்கிறது. அத்துடன் இந்த உத்தரவை பின்பற்றாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் இன்று கூறியுள்ளனர்.


     உத்திரபிரதேச மாநிலத்தல் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தது தொடர்பாகவும் , இதில் சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தியும் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது; 
     ஒரு குற்றப்புகாரில் வெளிப்படையான , தெரியும் அளவிற்கு குற்றம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தாலே உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும். இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அது போல் எப்.ஐ.ஆர்., போடாமல் நடவடிக்கை எடுப்பதும் அவசியமில்லை.

     போலீசாரின் முதல்கட்ட ஆய்வும் 7 நாட்களுக்குள் இருக்க வேண்டும். தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அடிப்படையில் நடவடிக்கை என்பதை விட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கலாம். எப்.ஐ.ஆர்., போட மறுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

இது ஏற்று கொள்ளக்கூடியது :       திருமண பந்த பிரச்னை, ஊழல், நிதி முறைகேடு, நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் முதல்கட்ட விசாரணை மிக முக்கியத்துவமாக இருக்க வேண்டும். இது ஏற்று கொள்ளக்கூடியது. எப்.ஐ.ஆர், பதிவேட்டில் காட்டப்பட்டு அதற்கான நகல்கள் புகாரர்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். புகாரில் ஆதாரங்கள் இருந்தால் ஒழிய கைது நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். 
பசுமை நாயகன் Pasumai Nayagan

கட்டப்பஞ்சாயத்து இனி முடியாது :  தலைமை நீதிபதி சதாசிவம்     தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ( அரசியல் சாசன பெஞ்ச் ) இந்த சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு முக்கியத்தும் வாய்ந்ததாகும். குறிப்பாக பல போலீஸ் ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுப்பது, எப்.ஐ.ஆர்., போட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, காவல் நிலையங்களிலேய பேசி தீர்க்கும் கட்டப்பஞ்சாயத்து இனி நடத்த முடியாது.

ஒலிம்பிக்கிலும் சாதிக்க லட்சியம் -ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற மதுரை மாணவி


Click Here
www.thagavalthalam.com பசுமை நாயகன்
                    ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஆசிய தடகள போட்டியில், 100 மற்றும் 200 மீ., தூர ஓட்டத்தில், புதிய சாதனையுடன் தங்க பதக்கம் வென்றார்,20வயதான மதுரை மாணவி அர்ச்சனா.

       மேலூர் திருவாதவூர் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுசீந்திரன்.இவரது மகள் அர்ச்சனா, சென்னை அண்ணா பல்கலையில் பி.இ., சிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே 100, 200 மீ., ஓட்டம், 400 மீ., ரிலே போட்டியில் தொடர்ந்து சாதனை புரிந்தார். மாநில அளவிலான போட்டியில் 50 தங்கம், 10 வெள்ளி பதக்கங்கள் பெற்றார். தேசிய அளவில் 25 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் பெற்றார். சமீபத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். 
             மதுரையில் நடந்த தென் மண்டல அளவிலான போட்டியில் 100, 200 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். கொச்சியில் நடந்த தேசிய போட்டியில் முதலிடம் பெற, தெற்காசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த வாரம் நடந்த போட்டியில் 100 மீ., ஓட்டத்தை 12.01 வினாடியிலும், 200 மீ.,க்கு 24.063 வினாடியிலும் ஓடி, புதிய சாதனை படைத்தார். இதன் மூலம், 2007ம் ஆண்டு தெற்காசிய போட்டியின் சாதனை முறியடிக்கப்பட்டது. இவ்விரு போட்டியில் தங்கம் வென்ற இவர், 400 மீ., தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார். "2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்' என்கிறார் அர்ச்சனா.

                                                                         -தேனி முருகேஸ்வரன். 

Click Here

கொசு‘-வுக்கான மருந்து


பசுமை நாயகன் Pasumai Nayagan

       நிறைய நண்பர்கள் ‘அது என்ன வழி’ என்றுகேட்கத் தொடங்கிவிட்டார்கள். வேறு சிலர் அது என்ன பவுடர் என்கிறார்கள். நம்ப முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ஜெபமணி மோகன்ராஜ் அவர்களுக்கு அவசரமோ அவசரம். அதனால் அனைவருக்குமாக கூறிவிடுகிறேன்.

              ரொம்ப சின்னதா ஒரு அட்டை பெட்டி. உடைத்த பாதி தேங்காய் அளவிற்கு இருந்தால் போதும். கூடவே ஒயர் இணைப்புடன் ஜீரோ வாட்ஸ் பல்ப். இப்போது கற்பூரவள்ளி செடி இலையை ஒரு 15 பரித்துக்கொள்ள வேண்டும். (என் வீட்டு மாடியில் நிறைய கற்பூறவள்ளி செடி வைத்துள்ளேன்.) அந்த இலையை சிறிய அட்டைப்பெட்டியில் போட்டு, அடுக்கி, அதன்மீது ஜீரோ வாட்ஸ் பல்ப்பை வைத்துவிட வேண்டும்.

           இப்போது சுவிச் போட்டவுடன் லைட் எரியும். மிதமான வெப்பம் வரும். அந்த வெப்பத்தில் கற்பூரவள்ளி தழைகள் அப்படியே ஆவியாகும். பிறகென்ன வீடுமுழுக்க நல்ல நறுமனம். அந்த கற்பூரவள்ளி நெடியில் ‘கொசு’ அண்ணாச்சி, நம்ப மன்மோகன் சிங் மாதிரி மௌனமாயிடுவாரு. 2-ஜி ன்னு சொன்னவுடனே பிரதமர் பதறி ஓடுற மாதிரி கொசு ஓடிடும்.மறு பேச்சி, ஒரு வார்தை இருக்காது. ரசாயண நெடி ஏதுமிருக்காது. நல்ல மூலிகை காற்று. இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நல்லது. அமைதியான தூக்கம்.பக்க விளைவுகள் ஏதுமில்லை. தினமும் இதைத்தான் பயன்படுத்தி வருகிறேன். 

           நேற்று நல்ல மழை. மாடிக்கு போக முடியல. கற்பூரவள்ளி தழையை பறித்து வைப்பதில் ‘கௌவர்மெண்ட்’ சோம்பேறித்தனம். அதன் விளைவுதான் முன்ன எழுதின ‘அவதார’ வேஷம்.

போலி மற்றும் காலாவதி ஆன பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்

www.thagavalthalam.com பசுமை நாயகன்

      மதுரையில் 7 விவசாய மருந்துக்கடைகளிலிருந்து 47 லட்ச ரூபாய் மதிப்பிலான போலி மற்றும் காலாவதி ஆன பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 கடைகளிலிருந்து வாங்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்தும்       பூச்சிகள் கட்டுக்குள் வரவில்லை என விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரையில் உள்ள சிம்மக்கல், கீழமாட வீதி உட்பட பல இடங்களில் வேளாண் துறை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் வேளான்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

அப்போது சிம்மக்கல்லில் உள்ள ஒரு கடையில் கடை உரிமையாளர் உரிமம் இல்லாமல் போலியான மருந்துகளையும், அதற்கான ஸ்டிக்கரையும் தயாரித்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து திலகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஜெய்சிங் , போலி மருந்துகள் தயாரிப்பதைக் குடிசைத் தொழில் போல் பலர் செய்து வருவதால் இது குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
-பசுமை நாயகன்

குறைந்து கொண்டே போகும் விவசாயம்


பசுமை நாயகன் Pasumai Nayagan www.thagavalthalam.com
இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டி சென்று கொண்டே இருக்கிறது. அத்தனைப் பேருக்கும் உணவு அளிக்க வேண்டிய விவசாயத்துறை குறைந்து கொண்டே போகிறது. விவசாயிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள் செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். பசுமை புரட்சி விவசாயத்தை பசுமை ஒரு பெரும் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாக இருந்து வருகிறது. விவசாயத்தை விட்டுவிட்டு கிராமமக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இப்படியே போனால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானியங்கள் கிடைக்காது பஞ்சம் ஏற்படும் அபாயம்முள்ளது. அரசு விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கவேண்டும். 
                    தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர். இதில் நீர்பாசனவசதி இருப்பதாக கருதப்படுகிற நிலம் சுமார் 33 லட்சம் ஹெக்டேர்தான். நீர்பாசன வசதியற்ற, வானம் பார்த்த பூமியாக இருக்கும் நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேர்ராகும் ! அதாவது நாம் மொத்த நிலப்பரப்பான 130 லட்சம் ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேரைதான் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். இது மேலும் நகரமயம் என்று குறைந்து கொண்டே போகிறது...! 2020-ல் பஞ்சம் ஏற்படுவது உறுதி...!.........?
                                                                                                        -பசுமை நாயகன்.