மதுரை பிஆர்பி கிரனைட் நிறுவனம் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. கீழையூர் கிராம நிர்வாக அலுவலர் அக்பர் சேட் அளித்த
புகாரின்பேரில் கீழவளவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்களில் கிரனைட் வெட்டி எடுத்தது, பாசன கால்வாய்கள
சேதப்படுத்தியது என்பன உட்பட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பிஆர் பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி, மகன்கள் சுரேஷ் குமார், செந்தில்
குமார் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளையும் சேர்த்து பிஆர்பி
நிறுவனம் மீது மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.