மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த
தனி வார்டு அமைக்க தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகபணி இயக்குனர் பரஞ்ஜோதி
உத்தரவிட்டுள்ளார். மேலுர் பகுதியில் டெங்கி நோய்க்கு இதுவரை 11பேர்
உயிரிழந்ததை அடுத்து மேலூர் அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு நடத்தினார்.
ஆய்வின் போது இரத்த பரிசோதனை ஆய்வகத்தில் மக்கள் கூட்டம் அதிகம்
இருந்ததால், மூன்று பரிசோதனை நிலையங்களை புதிதாக அமைக்க உத்தரவிட்டார்.
டெங்கிற்கென தனி வார்டு அமைக்க உத்தரவிட்ட பரஞ்ஜோதி அதற்கான மருத்துவ
குழுக்கள் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுவர் என தெரிவித்தார்.
செவிலியர் போராட்டம் குறித்து பேசிய பரஞ்ஜோதி, இதுபோன்ற அவசரக்கால
சூழ்நிலையில் செவிலியர்கள் நடத்தும் போராட்டம் கண்டிக்கத்தக்கது என
தெரிவித்தார்.
-தேனி முருகேஷ்