மதுரை ஆதீன மடாதிபதி பதவியில் இருந்து அருணகிரிநாதரை நீக்கக் கோரி,
இந்து அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை,
மதுரை மாவட்ட நீதிமன்றம் அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சார்பில், தாக்கல்
செய்யப்பட்ட பதில் மனுவில், இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்தியானந்தா
நீக்கப்பட்டு விட்டதாகவும், அவருடன் சேர்ந்து தொடங்கப்பட்ட அறக்கட்டளை
செயலிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதே போல், அருணகிரிநாதரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி, சென்னை
உயர்நீதிமன்றத்தில் கடந்த 1984ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில்
உள்ளதால், இந்து அறநிலையத்துறை தற்போது தாக்கல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி
செய்ய வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை
விசாரித்த நீதிபதி குருவையா, விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு
ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-இணைய செய்தியாளர் - R.முத்துகிருஸ்ணன்