மதுரை அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் படுகாயம் அடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மதுரை புளியங்குளத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி நேற்றிரவு தனியார்
மருத்துவமனையில் உயிரிழந்தார். இன்று காலை அதே ஊரைச் சேர்ந்த
சுந்தரபாண்டியன், வெற்றிவேல் ஆகியோர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள்,
பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர். பதற்றம் ஏற்படாமல் தடுக்க தேவையான
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த 30 ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு காரில் சென்று
திரும்பிக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டவர்கள் மீது நள்ளிரவில் பெட்ரோல்
குண்டுகள் வீசப்பட்டன. இதில் காரில் இருந்த 21 பேருக்கும் தீக்காயம்
ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை
எடுத்து வருகின்றனர்.
-தேனி முருகேஷ்