தேவர் ஜெயந்தியின் போது நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து மதுரை
மாவட்டத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வன்முறைச்
சமபவங்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து நீதி விசாரணை நடத்த கோரியும், இழப்பீட்டுத் தொகையை
அதிகரிக்க கோரியும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று முழு
அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து மதுரையில் கடைகள்
அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பை முன்னிட்டு ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித
சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்வேறு அமைப்பினர் வ்ன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து
பெரியார் பேருந்து நிலையம் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் மறியலில்
ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.