தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

பி.ஆர்.பி.,க்கு 3 வழக்குகளில் ஜாமின் – மேலூர் நீதிமன்றம் உத்தரவு

    கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பான மூன்று வழக்குகளில், பி.ஆர்.பழனிச்சாமிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கிரனைட் கற்களை வெட்டி எடுத்ததில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பி.ஆர்.பழனிச்சாமி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் அதிகளவு கிரனைட் கற்கள் வெட்டியதாக அவர் மீது தொடரப்பட்ட நான்கு முக்கிய வழக்குகளில், 90 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், பழனிச்சாமியை ஜாமினில் விடுவிக்க கோரி, அவரது வழக்கறிஞர் மனோகரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த மேலூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜெய்குமார், மூன்று வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.