மதுரையில் டெங்கி மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை
ஒழிப்பதற்காக அம்மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கிராம
பஞ்சாயத்துக்களில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் டெங்கி மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 40க்கும்
அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதையடுத்து தடுப்பு நடவ்டிக்கைகளை மாவட்ட
நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதன்படி, மழை நீர் தேங்குவதற்கு காரணமான
பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதை நேரடியாக பார்வையிட்ட மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, ஒவ்வொரு
பஞ்சாயத்துகளில் ஒதுக்கப்பட்டுள்ள வளர்ச்சி நிதிகளில் இருந்து
சுத்தப்படுத்தும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும் கிராம
பஞ்சாயத்து மேற்கொள்ளும் பணிகளுக்கு மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை எனவும்
அவர் வேண்டுகோள் விடுத்தார்.
-இணைய செய்தியாளர்-M.சின்னதுரை