மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு
பலியாகியுள்ளனர். இதன்மூலம் கடந்த 2 மாதங்களில் மட்டும் வைரஸ்
காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த புலிப்பட்டி
கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.
பழைய சுக்காம்பட்டியைச் சேர்ந்த செல்வி என்பவர் ஏற்கனவே காய்ச்சலால்
பாதிக்கப்பட்டு குணமடைந்தபின் வீடு திரும்பியுள்ளார். ஆனால் மீண்டும்
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்.
இதுதவிர எ.வள்ளாளப்பட்டியைச் சேர்ந்த வெள்ளையம்மாள், படிவாசக கருப்பன்
ஆகியோரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பலன் அளிக்காமல் பலியாகியுள்ளனர். வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை
எ.வள்ளாளப்பட்டியில் மட்டும் 7 பேரும் பழைய சுக்காம்பட்டியில் 5 பேரும்
உயிரிழந்துள்ளனர்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா