மதுரை மாவட்டம் மேலூரில் டெங்கி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுவதை
தடுக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்வர்கள்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டைக்கிணறு தெருவைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி பரக்கத் நிஷா
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுவரை 41 பேர் டெங்கி காய்ச்சலுக்கு பலியாகிவிட்ட நிலையில் மெத்தனமாக
செயல்படும் நகராட்சியை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.இதனையடுத்து காவல்துறையினர் 212 பேர் மீது வழக்கு பதிவு
செய்துள்ளனர்.
-தேனி முருகேஸ்