மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அரசு விதிகளுக்கு மாறாக சிறப்பு யாகம்
நடத்தப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா விசாரணைக்கு
உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனை வளாகத்திற்குள் அந்த யாகம்
நடத்தப்பட்டது. அனைத்து மதத்தினரும் சிறப்பு வழிபாடு நடத்துவதற்கு பதிலாக
ஒரு மதத்தினர் மட்டும் நடத்தியது ஏற்புடையதல்ல என்று கூறியிருக்கும் மாவட்ட
ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு
ஆர்டிஓவிற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா