மதுரை மேலூர் பகுதியில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு
சிறுவன் இன்று பலியானார். இதனால் அந்த பகுதியில் காய்ச்சலுக்கு பலியானோர்
எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. கொட்டக்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுவன்
சஞ்சய் , காய்ச்சல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுவன் சிகிச்சை பலியின்றி இன்று காலை
உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மேலூர் பகுதியில்
மட்டும் 34 பேர் பலியாகியுள்ளனர்.
காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ள ஏ.வல்லாலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில்
மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள்
எடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
-தேனி ராஜா