போதிய பணியாளர்கள் இல்லை என்பதால், மேலூரில் மாதத்திற்கு எட்டு நாள்கள்
மட்டுமே உணவுப்பொருள் வழங்கும் கடை திறக்கப்படும் அவல நிலை நீடிக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 85
ஆயிரம் பேர் குடும்ப அட்டைகள் வைத்துள்ளனர். இதில் 23 மற்றும் 17வது
வார்டுகளுக்குச் சேர்த்து இயங்க வேண்டிய ரேஷன் கடை ஒன்று வாரத்தில் 2
நாட்கள் மட்டுமே செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. போதிய பணியாளர்கள்
இல்லாததால், ஒரு ஊழியரே பல கடைகளில் பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதால்,
இந்த வார்டுகளில் பெரும்பாலான நேரங்களில் கடைகள் அடைத்தே கிடக்கின்றன.
-தேனி முருகேஸ்வரன்.