மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசமாயின. மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள வருவாய் அலுவலர் அலுவலகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள்ளேயே தலைமை தீயணைப்பு நிலையம் இருப்பதால் 5 தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு உடனடியாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்து குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீ விபத்தில் நிர்வாக பிரிவில் வைக்கப்பட்டிருந்து ஆவணங்கள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
-தேனி முருகேஸ்வரன்.