மாமன்றக் கூட்டத்தில் பேச போதிய நேரம் ஒதுக்குவதில்லை என்றும், இதரப்
பணிகள் குறித்து தன்னை கலந்து ஆலோசிப்பதில்லை எனவும் கூறி, மதுரை மாமனறக்
கூட்டத்தில் இருந்து அதிமுக மண்டலத் தலைவர் ராஜபாண்டி வெளிநடப்பு செய்தார்.
மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் அதிகாரிகள் மீது, மாமன்றக்
கூட்டத்தில் பேச போதிய நேரம் ஒதுக்குவதில்லை, மண்டலம் தொடர்பான அதிகாரிகள்
பணி நீக்கம் உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் தன்னை கலந்து ஆலோசிப்பதில்லை என்பன
உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிய அதிமுக மண்டலத் தலைவர்
ராஜபாண்டி இதனைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு
செய்தார்.
-தேனி முருகேஸ்வரன்.