உணவு பதப்படுத்தும் தொழில் இந்தியாவில் வளர்ச்சி பெற்று வருவதாக மத்திய
உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சக செயலாளர் ராமேஷ் கக்கர்
தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் உணவு பதப்படுத்தும் தொழில் குறித்த பன்னாட்டு கருத்தரங்கை
தொடங்கி வைத்து பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். மேலும் உணவு
பதப்படுத்தும் தொழில் கடந்த ஆண்டை விட 15 சதவிகிதம் வளர்ச்சி
பெற்றுள்ளதாகவும், அந்தந்த மாநிலத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உணவு
பதப்படுத்தும் தொழில் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் 79 இடங்களில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்க 11-ம்
ஐந்தாண்டு திட்டத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் தலா ஒரு குளிர்சாதன கிடங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர்
தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக்
துணைவேந்தர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-தேனி முருகேஸ்வரன்.