மதுரையில் கேரளாவைச் சேர்ந்த தங்க நகை வியாபாரிகளிடம் ரூ. 1.45 கோடி
மதிப்பிலான நான்கரை கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திருச்சூரில் இருந்து நேற்றிரவு தனியார் பேருந்து மூலம் கேரளாவைச்
சேர்ந்த 2 தங்க நகை வியாபாரிகள் மதுரைக்கு வந்துள்ளனர். இன்று அதிகாலை 5.30
மணியளவில் அவர்கள் மதுரையில் இறங்கியுள்ளனர். கூடலழகர் பெருமாள் கோவில்
பகுதியில் அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார்
சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வியாபாரிகள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி
விட்டு தங்க கட்டிகள் இருந்த பெட்டியை கொள்ளையடைித்துச் சென்றதாக
வியாபாரிகள் இருவரும் போலீஸில் புகார் கொடுத்ததுள்ளனர்.
புகாரைப் பதிவு செய்த போலீஸார்,வியாபாரிகளிடம் கொள்ளையடித்த மர்ம
நபர்கள் கேரளாவில் இருந்தே வியாபாரிகளை பின் தொட்நது வந்தனரா இல்லை
உள்ளூரைச் சேர்ந்தவர்களா என்ற கோணதை்தில் போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
-தேனி முருகேஸ்வரன்.