தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

இருக்கைளில் தொடங்கி, உணவுப் பொருள் வரை ரயில்வே நிர்வாகம் தரத்திற்கு உத்தரவாதம் தர வேண்டும்



  ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், ரயில் சேவையின் தரம் குறித்தும் பேச வேண்டியது அவசியமாகிறது. இருக்கைளில் தொடங்கி, உணவுப் பொருள் வரை ரயில்வே நிர்வாகம் தரத்திற்கு உத்தரவாதம் தர வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது பயணிகளிடம்.
  தமிழகத்தில் தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் மதுரையை தலைமையிடமாகக் கொண்ட மதுரை கோட்டம் நடப்பு நிதியாண்டில் 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இருப்பினும், முதல் வகுப்பு குளிர்பதனப் பெட்டிகளில் கூட கழிவறை சுத்தமாக இல்லை என்று பயணிகள் புகார் கூறுகின்றனர். எலித் தொல்லை, மூட்டைப்பூச்சித் தொல்லை, போர்வை மற்றும் தலையணைகளின் பராமரிப்புக் குறைபாடு என புகார்களின் பட்டியல் நீண்ட கொண்டே போகிறது.
  பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய ரயில்களை இயக்குவதோடு, கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பயணிகள், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இருவழிப்பாதை வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
  உணவின் விலை 100 சதவிகிதம் உயர்த்தப்பட்ட போதும், அதன் தரமோ குறைவாகவே இருக்கிறது என்று கூறும் பயணிகள், ரயில்வே பிளாட்பாரங்கள், கழிவறைகளை சுத்தம் செய்யவும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
  ரயில்வே துறையில் போதிய ஆட்கள் இல்லாததே பிரச்னைகளுக்குக் காரணம் என்று கூறும் ரயில்வே துறை ஊழியர்கள், கடந்த 1990ம் ஆண்டு இருந்த ரயில்களின் அடிப்படையிலேயே தற்போதும் ஊழியர்கள் எண்ணிக்கை இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
  மதுரை ரயில்வே கோட்ட ஊழியர்களும், பயணிகளும் ரெயில்வே பட்ஜெட்டில் மிகவும் அதிகமாகவே எதிர்பார்க்கின்றனர். அவையெல்லாம் நனவாகுமா என்பது வரும் 26ம் தேதி தெரிந்துவிடும்.
                                                                          -தேனி முருகேஸ்ன்.