தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

தேனி மாவட்ட வனப்பகுதியில், கடந்த ஐந்து நாட்களாக காட்டுத் தீ




   தேனி மாவட்ட வனப்பகுதியில், கடந்த ஐந்து நாட்களாக காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதையடுத்து, இதுபோன்று தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

போடி, தேனி, கம்பம் உள்ளிட்ட வனப்பகுதிகளில், கடந்த ஐந்து நாட்களாக காட்டுத் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. இதில் சிக்கி ஏராளமான உயிரினங்கள் மற்றும் அரியவகை மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
  காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க, யானை, காட்டெருமை போன்ற விலங்கினங்கள் ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தீயை அணைக்கவும், ஊருக்குள் வரும் வனவிலங்குகளை தடுக்கவும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
                                        -தேனி முருகேஸ்ன்.