தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்



     அரசுக்கு முழுமையாக வரி கட்டினால் நாடு எப்படி வளர்ச்சி பெறும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.
   வரி வருவாய் என்பது வளர்ச்சிக்கான வழி என்பதை உணர்ந்து நடந்து கொள்கின்றனர் இந்த கிராம மக்கள். 
  இவர்கள் தான் "நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்"என்ற உயரிய சிந்தனை கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது.
   மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே உள்ளது திரளி என்ற கிராமம். இங்கு சுமார் ஐந்தாயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர். ஊருக்குத் தேவையானதை அரசிடம் போராடி பெறுவதை விட, திரளி பஞ்சாயத்திற்கு ஒழுங்காக வரி கட்டினால் ஊரின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை விதைத்துள்ளார் பஞ்சாயத்து பெண் தலைவர் சந்திரா பிச்சை. இதற்கு நல்ல வரவேற்பும், கை மேல் பலனும் கிடைத்துள்ளது. நூறு சதவீத வரி வசூல் செய்ததற்காக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த ஊராட்சி தலைவி என்ற விருதும் சந்திரா பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.
    ஊராட்சி மன்ற வரிகளான வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் பல்வகை வரிகளை முழுமையாக கட்டியதன் விளைவு, திரளி கிராமத்தில் எதிரொலிக்கிறது. அந்த கிராமத்தின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் நீர்நிலைகளில் இருந்த 18 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது ஊராட்சி மன்ற நிர்வாகம். சுமார் 70 ஆண்டுகளாக ஊரணி ஒன்றினை செம்மைப்படுத்தி விவசாயம் செய்து வந்த தனியார் ஒருவரிடம் இருந்து ஊரணி மீட்கப்பட்டு, சம நில பரப்பாக இருந்த அந்த இடம், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் மக்களை கொண்டே கரைகள் அமைத்து மீண்டும் ஊரணியாக மாறியுள்ளது.
    வரி கட்டச் சொல்லி வலியுறுத்துவதும், பிரச்சாரங்கள் செய்வதுமாக மக்களை வரி கட்டச் செய்வது ஒரு விதம்.. வரியை கொண்டே மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை தாங்களாகவே முன் வந்து வரி கட்ட வைத்திருக்கும் திரளி பஞ்சாயத்து புதுவகை உதாரணமாக விளங்கி வருகிறது