தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

போலீஸ்காரர்களே ஜாக்கிரதை..... ! எப்.ஐ.ஆர், பதிவு செய்ய மறுக்காதீங்க .!


www.thagavalthalam.com பசுமை நாயகன்


         நாடு முழுவதும் போலீசாருக்கு தலையில் குட்டு வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட் எப்.ஐ.ஆர், தொடர்பா ஒரு சிறப்பு யோசனையை வழங்கியிருக்கிறது. அத்துடன் இந்த உத்தரவை பின்பற்றாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் இன்று கூறியுள்ளனர்.


     உத்திரபிரதேச மாநிலத்தல் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தது தொடர்பாகவும் , இதில் சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தியும் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது; 
     ஒரு குற்றப்புகாரில் வெளிப்படையான , தெரியும் அளவிற்கு குற்றம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தாலே உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும். இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அது போல் எப்.ஐ.ஆர்., போடாமல் நடவடிக்கை எடுப்பதும் அவசியமில்லை.

     போலீசாரின் முதல்கட்ட ஆய்வும் 7 நாட்களுக்குள் இருக்க வேண்டும். தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அடிப்படையில் நடவடிக்கை என்பதை விட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கலாம். எப்.ஐ.ஆர்., போட மறுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

இது ஏற்று கொள்ளக்கூடியது :       திருமண பந்த பிரச்னை, ஊழல், நிதி முறைகேடு, நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் முதல்கட்ட விசாரணை மிக முக்கியத்துவமாக இருக்க வேண்டும். இது ஏற்று கொள்ளக்கூடியது. எப்.ஐ.ஆர், பதிவேட்டில் காட்டப்பட்டு அதற்கான நகல்கள் புகாரர்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். புகாரில் ஆதாரங்கள் இருந்தால் ஒழிய கைது நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். 
பசுமை நாயகன் Pasumai Nayagan

கட்டப்பஞ்சாயத்து இனி முடியாது :  தலைமை நீதிபதி சதாசிவம்     தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ( அரசியல் சாசன பெஞ்ச் ) இந்த சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு முக்கியத்தும் வாய்ந்ததாகும். குறிப்பாக பல போலீஸ் ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுப்பது, எப்.ஐ.ஆர்., போட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, காவல் நிலையங்களிலேய பேசி தீர்க்கும் கட்டப்பஞ்சாயத்து இனி நடத்த முடியாது.