மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து தனிப்படை போலீசார், தனியார் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிற்சாலையில், சோதனை மேற்கொண்டனர். அப்போது மினிவேனில் கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.